கையளவு இதயத்தில் கோடியளவு உன் நினைவுகள் .........................
எதையும் பிடிக்கவில்லை உன்னை காணும் வரை இப்போது பிடிக்கவில்லை என்ற வார்த்தையும் பிடித்து இருக்கிறதுஆம் என்னுள் மாற்றம் தந்தவள் நீதானே
உன்னைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்துபோவேனாஎன்பது தெரியாது.ஆனால்நான் இறக்கும்போதும்உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்என்பது மட்டும் தெரியும்....
********
சுறாமீன் நீந்திக்கொண்டே இருக்காவிட்டால் இறந்துவிடும் நான் உன்னைக்காதலித்துக்கொண்டே இருக்கவிட்டால் இறந்துவிடுவேன்....
நீ யாருக்கோ செய்தமெளன அஞ்சலியைப்பார்த்ததும்...எனக்கும்செத்துவிடத் தோன்றியது
********
நான் வழிபடஇந்த உலகத்தில்எத்தனையோ கடவுள்கள்இருக்கிறார்கள்.நான் பின்பற்றஇந்த உலகத்தில்எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.ஆனால்,நான் காதலிக்கஇந்த உலகத்தில்நீ மட்டும்தான் இருக்கிறாய்.
********
சிந்திய மழைமீண்டும் மேகத்துக்குள் போவதில்லைஆனால்,ஒவ்வொரு முறையும்நீ சிந்தும் வெட்கமெல்லாம்மீண்டும்உன் கன்னத்துக்குள்ளேயேபோய்விடுகிறதே
.****************'
நிலா ஏன்தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'நீ அடிக்கடி'நேரமாயிடுச்சு போகணும்' என்றுஉன் வீட்டுக்குப்போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவாஅதனால்தான்.
*********
தான் வரைந்த ஓவியத்தைகடைசியாக ஒரு முறைசரி செய்யும் ஓவியன் போலநீ ஒவ்வொரு முறையும்உன் உடையைச் சரி சய்கிறாய்.
*********
காற்றோடு விளையாடிக்கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பைஇழுத்துநீ இடுப்பில்செருகிக்கொண்டாய்அவ்வளவுதான்...நின்றுவிட்டது காற்று.
*********
தொலைபேசியில்நீ எனக்குத்தானே 'குட்நைட்'சொன்னாய்.ஆனால் இந்த இரவோஅதைத்தான் நீ 'நல்ல இரவு'என்றுசொல்லிவிட்டதாக நினைத்துவிடியவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே
.*********
என்னை ஒருகுடுகுடுப்பைக்காரனாய்நினைத்துக்கொண்டுஓர் அதிகாலையில்உன் வீட்டு முன் நின்று'இந்த வீட்டில் ஒரு தேவதைவாழ்கிறது'என்று கத்திவிட்டுகுடுகுடுவெனநான் ஓடிவந்திருக்கிறேன்.
********
நான்உன்னைக் காதலிக்கிறேன்என்பதற்காகநீயும் என்னைக்காதலித்துவிடாதே!என் கொடிய காதலைஉன் பிஞ்சு இதயத்தால்தாங்க முடியாது.
********
மழை வந்துநின்ற பிறகும்செடிகள் வைத்திருக்கும்மழைத்துளிகளைப் போலஎன் அறை வைத்திருக்கிறதுநீ வந்து போன பிறகும்உன்னை.
*********
எல்லா தெய்வங்களும்தங்களைக் குளிப்பாட்டிவிடபூசாரி வைத்திருக்கும்போதுநீ மட்டும் ஏன்நீயே குளித்துக்கொள்கிறாய்?செத்துவிடத் தோன்றியதுகிடைத்த இடத்தைநிலைப்படுத்தி கொள்ளவேகழிகின்றனஎஞ்சிய காலங்கள் அனைத்தும்
........
மழை நீரில் உன் உருவம் தோன்றியது,எங்கே?பறவைகள் வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !
நிலவில் உன் உருவம் தோன்றியது,எங்கே?மேகம் வந்து மறைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !
வானவில்லில் உன் உருவம் தோன்றியது,எங்கே?வெளிச்சம் வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !
நட்சத்திரத்தில் உன் உருவம் மின்னியது ,எங்கே?சூரியன் வந்து உருக்கி விடுமோஎன்று கவலைப்பட்டேன் !
பூக்களில் உன் உருவம் மலர்ந்தது ,எங்கே?பிறர் வந்து பறித்து விடுவரோஎன்று கவலைப்பட்டேன் !
குழந்தையின் முகத்தில் உன் உருவம் தோன்றியது,எங்கே?அழுகை வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன்!
இதயத்தில் உன் உருவம் தோன்றியது,எங்கே?மதங்கள் வந்து பிரித்து விடுமோ !என்று கவலைப்படுகிறேன்...
காலத்தின் நியதிகளைமாற்றும் உரிமைஇங்கு எவருக்கும் இல்லை....மாற்றங்களில் அடங்கியது தான்மனித வாழ்க்கை.
No comments:
Post a Comment