தனித்து நின்ற
தனிமையைஎரித்துவிட்டு போனதுஉன் பிரிவு;
சாம்பல் மட்டும்சாயம் போகாஉன் நினைவுகளாகஎன்னில்.....போட்டதும் கலைந்தபடுக்கையும்,கேட்டதும் கிடைக்கும்முத்தங்களும்,சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றனஇரவுகளை....
உன்னை நினைத்துஉறங்கிவிட்ட இரவுகளில்கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,கொஞ்சம் மையும்மட்டும் கோலமிட்டிருந்தது,உன் காதலைஎன்னைச் சுற்றி....
தொலைந்துவிட்டபேனாவின் மூடியும்பறந்துவிட்ட கிளியின்இறந்தகால கூண்டும்வளர்த்துவிட்டிருந்ததுபிரிந்துவிட்ட நம் காதலின்காயத்தை....
********************************உன்னால்கவனிக்கப்படாதகவிதைகளெல்லாம்சிதறித்தான் போகின்றனகண்ணாடி துகள்களாக...
குமிழி உடைக்கும்குழந்தையாயிருந்தேன்...குற்றப்பத்திரிக்கைகள் சுமக்காமல்,பருவம் கடந்தேன்...எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்தவார்த்தைகளணைத்துக்கவிதை என்றேன்...உன்மேலெனக்குகாதல் என்றனர்...தடைத் தாண்டிச் செல்லத்திணவின்றி திரும்பிவந்தன...நினைவுகளனைத்தும் நாடோடிகளாய்...பின்,தனிமையைத் தனிமைப்படுத்தும்முயற்சியில்படுதோல்வியுற்று,பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலானபிரியங்களை...என்னிருபது நண்பர்களுக்கு...ஏனோ, இப்பொழுதெல்லாம்கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...என் குழந்தைப் பருவம்மட்டுமல்ல,என் காதல் சுமந்தகவிதைகளும் தான்...
ஜோதிடமோ, ஜாதகமோ...ஜாதி, மத பேதங்களோ, சமூகப் பிரச்சனைகளோ...செல்லிடைப் பேசியின்அழைப்புகளோ, குறுந்தகவல்களோ..அழகியல் கவிதைகளோ,அறிஞர்களின் கட்டுரைகளோ,என் வெட்கங்களோ..உனக்கான என் கோபங்களோ,..என எதுவுமேஎனைக்கவர்ந்ததில்லை...உனக்குப் பிடித்தமானவற்றைநீ பட்டியலிடும்வரை
***************
கொட்டிக்கிடக்கின்றனவார்த்தைகள்எனினும்உனக்கான கவிதைகள்மட்டும் இன்னும்ஏனோ கைவரவில்லை....நாம் தொட்டுசாயம் இழந்தவண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்கொண்டாட்டம்உன்னால் சிவந்தஎன் கன்னங்களைக் கண்டு....'ஹைய்யோ ஏன்டாஇப்படி சத்தம் போடுற??''சரிடி இனிமேசத்தம்போட்டுக் கூப்பிடல..முத்தம் போட்டு கூப்பிடறேன்போதுமா??'சத்தமில்லாமல்விலகிப்போனதுஎன் கோபமும், நாணமும்...நீ கைத்தடம் பதித்தஎன் வீட்டின் கதவு, ஜன்னல்..நகம் கடித்த என் நடுவிரல்..உன் வியர்வைத் துடைத்தஎன் தாவணி...உன் முத்தங்களை சேமிக்கும்என் கன்னம்...உன்னால் நெகிழ்ந்தஎன் முன்கை வளை..உனக்காக என் கொலுசு இழந்தஅந்த ஒரு மணி...உன் விரல் களைத்தஎன் கேசம்....நீயென நான் கட்டியுறங்கும்என் தலையணை...உன்னால் நான் சுமக்கும்காதல்...என நீயின்றி..எல்லாம் சுகமே,என்னைத் தவிர.........
No comments:
Post a Comment